சில்லா (திரைப்படம்)
சில்லா (திரைப்படம்) (Chilla அல்லது 40 DAYS OF SILENCE) உஸ்பெக்கிஸ்தான் நாட்டுத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் "சவ்தாத் இஸ்மைலோவா" (Saodat ISMAILOVA) ஆவார். 88 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளது. இத்திரைப்படம் உருவாக பல்வேறு நிறுவனங்கள் நிதியுதவி செய்தன. மொத்தத் தயாரிப்புச் செலவான 0.59 மில்லியன் யூரோவில் நிதியுதவியாக 013 மில்லியன் யூரோ பெறப்பட்டது. இத்திரைப்படம் சர்வதேச அளவில் "மெளனத்தின் 40 நாட்கள்" (40 DAYS OF SILENCE ) என்றே அறியப்படுகிறது.[1]
கதைக்கரு
[தொகு]பதின்ம வயதுப் பெண் திடீரென யாரிடமும் பேசாமல் 40 நாட்கள் மெளனமாக இருப்பதே இத்திரைப்படத்தின் கருவாகும். நான்கு தலைமுறை பெண்களின் வாழ்வை இத்திரைபப்டம் பேசுகிறது. பெண்களின் மீதான மதம் மற்றும் நம்பிக்கைகளின் தாக்கத்தை பற்றியது இத்திரைப்படம்.
பங்களிப்பாளர்கள்
[தொகு]இயக்குநர்
[தொகு]- சவ்தாத் இஸ்மைலோவா (Saodat ISMAILOVA)
நடிகர்கள்
[தொகு]- சவ்தாத் ரஹமினோவா (Saodat Rahminova)
- ருஷானா சாதிகோவா (Rushana Sadikova)
- பரோகாத் ஷுகுரோவா (Barohad Shukurova)
- ஃபரீதா ஒலிமோவா (Farida Olimova)
இசை
[தொகு]- ஜேக்கப் கிர்கிகார்ட் (Jacob Kirkegaard)
ஒளிப்பதிவு
[தொகு]- பெனிட்டோ ஸ்ரேன்ஜியோ (Benito Strangio)